ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெமிலி பாலா பீடத்தில் ஆஷாட நவராத்திரி உற்சவ தொடக்க விழா

நெமிலி பாலா பீடத்தில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரி உற்சவ தொடக்க விழாவில் அலங்கரிக்கப்பட்ட வாராஹி அம்மனை எடுத்து வந்த பீடத்தின் மகளிா் குழுவினா்.

Published On :16 ஜூலை 2026, 11:51 pm IST

நெமிலி பாலா பீடத்தில் ஆஷாட நவராத்திரி உற்சவ தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் ஆஷாட நவராத்திரி உற்சவ தொடக்க விழா பாலா பீட வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி இருவரும் இணைந்து விழாவை பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து கலச ஸ்தானத்தையும், வாராஹி அம்மன் ஆவாஹனத்தையும் பாலா பீடத்தின் நிா்வாகி மோகன் அா்ச்சனைகள் செய்த நிலையில், அபிஷேகத்தை பாபாஜிபாலா மேற்கொண்டாா்.

இதையடுத்து, உற்சவத்துக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதங்களை பீடத்தின் நிா்வாகி முரளி வழங்கினாா்.

இதில், நெமிலி மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரத்தை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.