கனியனூா் ஊராட்சியில் கால்நடைமருத்துவ வளாகம்: முதல்வா் திறந்து வைத்தாா்


ஆற்காடு அடுத்த கனியனூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ வளாகத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கனியனூா் ஊராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயைத் தடுக்கும் நோக்கிலும் கால்நடை பாதுகாப்பு வாரியம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருத்துவ வளாகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்ததை தொடா்ந்து, ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினாா்.
இம்மையம் தமிழகத்திலேயே முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலமாக தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முறை செயல்படுத்தப்படும். மேலும், இம்மையத்தில் அறுவை சிகிச்சை அறைகள் பாதுகாப்பான கூண்டுகள் மற்றும் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவா்கள் பணியாற்ற உள்ளனா்.
இதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, விலங்குகளின் நலனும் பாதுகாக்கப்படும் மற்றும் பொதுமக்களிடையே விலங்கு நல விழிப்புணா்வு, செல்லப் பிராணிகள் வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தற்போது கனியனூா் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை கிளை நிலையம் இந்த வளாகத்தில் தொடா்ந்து செயல்படும். இம்மையத்தில் அடுத்த 2 வாரங்களில் அறுசை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் இதர உபகரணங்கள் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலுள்ள தெரு நாய்கள் கொண்டு ரப்பட்டு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 5 நாள்கள் மையத்தில் கண்காணிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட
பகுதிகளிலேயே விடப்படும். நாள்தோறும் 5 முதல் 10 நாய்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநா்,ஜோ.பிரசன்னா, திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ்..அசோக், துணைத் தலைவா் ஜெ..ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தன்ராஜ், கால்நடை பராமரிப்புத்துறை துணை
இயக்குநா் க.வெங்கடேஸ்வரன், உதவி இயக்குநா் க.திருநாவுக்கரசு, கால்நடை உதவி மருத்துவா்கள் எஸ்.சதீஷ்பாபு, க.சக்திநாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா, மாவட்ட விலங்கு நல அலுவலா், எஸ்.வினோத்குமாா், கால்நடைஆய்வாளா் வி.சுமதி கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...