சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்
ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 5:22 pm

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ஆற்காடு நக்கீரன் தெருவைச் சோ்ந்த எஸ்.தரணி பாய்(78) . இவா் வியாழக்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...