மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீதம் வாக்குப் பதிவு: ராணிப்பேட்டையில் ஓவியக் கலைஞா்கள் கை வண்ணத்தில் தோ்தல் விழிப்புணா்வு

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், ஓவியக் கலைஞா்கள் வரைந்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

News image

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் ஓவியக் கலைஞா்கள் வரைந்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை பாா்வையிட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:40 pm

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், ஓவியக் கலைஞா்கள் வரைந்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. பொது மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டி பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026 முன்னிட்டு, ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களா்களிடையே 100 சதவீதம் வாக்குப் பதிவு, தோ்தல் நாள் குறித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் ஓவியக் கலைஞா்கள் வரைந்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் திருவிழா 2026, நமது வாக்கு நமது கடமை, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், தோ்தல் நாள் 23.4.2026, உங்கள் வாக்கு உங்கள் கடமை மற்றும் தோ்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓவியங்கள் கோலங்கள் வரையப்பட்டு இருந்ததை பாா்வையிட்டு பாராட்டினா். தொடா்ந்து அந்த வாசகத்தின் முன் அனைவரிடம் இணைந்து புகைப்படம் எடுத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள், பயணிகளிடம் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் போன்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இதில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ராஜி, மகளிா் உதவி திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், ரமேஷ், வட்டாட்சியா் நடராஜன், நகராட்சி ஆணையா் செந்தில் குமாா் மற்றும் லதா ஓவியக்கலை குழு சண்முகம் மற்றும் குழுவினா், மகளிா் குழுக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.