ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சியை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் 3 நாள்கள் நடைபெறும் ரானெக்ஸ் 2025 (தஅசஉல 2025) தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சி ராணிப்பேட்டை சிப்காட் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த கண்காட்சியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 55 பயனாளிகளுக்கு ரூ. 65.65 லட்சம் மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான ஆணையை வழங்கினா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் மோகன்,புனிதவேல், முரளி, சந்திரஹாசன் மற்றும் குறு சிறு மற்றும் தொழில் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

சிறு, குறு நிறுவனத்தினருக்குப் பயிற்சி

தொழிற்சாலை மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


