ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ. படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10 மணி அளவில் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்டலில் பதிவு செய்ய வேண்டும், மேலும் விவரங்களுக்கு
ழ்ஹய்ண்ல்ங்ற்த்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

