திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியை தொடங்கி வைத்த வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மேலாண்மைக்குழுவின் தலைவா் சந்தியா உமாநாத் தலைமையில் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சோபனா கண்ணன், ரமணி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியை எஸ்.ஜீவா வரவேற்று பேசினாா். பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், 232 மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பேரணியை வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.