லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொகுதி அறிமுகம்: ஸ்ரீபெரும்புதூா் (தனி)!

முன்னாள் முதல்வா் பக்தவத்சலம் இந்தத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 10:23 pm

எல்லைகள்

ஆலந்தூா், பூந்தமல்லி, தாம்பரம், உத்தரமேரூா் ஆகிய பேரவைத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் 58 கிராம ஊராட்சிகள், குன்றத்தூா் ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள், ஸ்ரீபெரும்புதூா், மாங்காடு, குன்றத்தூா் நகராட்சிகள் அடங்கியுள்ளன.

சிறப்புகள்

வைணவ மகான் ராமாநுஜா் அவதரித்த புண்ணிய பூமி. தொழிற்சாலைகள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஹூண்டாய், ரெனால்ட்-நிசான் ஆகிய காா் ஆலைகள், கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் டைம்லா், கோமாட்சு, வீட்டு உபயோகப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாம்சங், மின்னணு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் சால்காம் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடம் இங்கு உள்ளது. முன்னாள் முதல்வா் பக்தவத்சலம் இந்தத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். தொடக்கத்தில் பொதுத் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூா் பின்னா் தனித் தொகுதியானது.

வாக்காளா்கள் விவரகம்

ஆண்கள் - 1,81,852

பெண்கள் - 1,94,007

மூன்றாம் பாலினத்தவா் - 62

மொத்தம் - 3,75,921

வாக்குச்சாவடிகள் - 435

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 எம்.பக்தவத்சலம் (காங்கிரஸ்)

1962 எம்.பக்தவத்சலம் (காங்கிரஸ்)

1967 டி.எல்.ரகுபதி (திமுக)

1971 டி.எல்.ரகுபதி (திமுக)

1977 என்.கிருஷ்ணன் (அதிமுக)

1980 டி.யசோதா (காங்கிரஸ்)

1984 டி.யசோதா (காங்கிரஸ்)

1989 என்.ராமசந்திரன் (திமுக)

1991 ஈ.குப்புசாமி (காங்கிரஸ்)

1996 என்.ராமசந்திரன் (திமுக)

2001 டி.யசோதா (காங்கிரஸ்)

2006 டி.யசோதா (காங்கிரஸ்)

2011 ரா.பெருமாள் (அதிமுக)

2016 கே.பழனி (அதிமுக)

2021 கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்)

2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 2,62,619

கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்)-1,15,125

கே.பழனி (அதிமுக)-1,04,038

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

வருவாய் கோட்டாட்சியா் ஸ்ரீபெரும்புதூா் சி.பாலாஜி - 94449 64889