லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :17 மார்ச் 2026, 7:26 pm

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாபாத் பா.கணேசன், கே.பழனி, அமைப்புச் செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு, பாஜக மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன், பாமக மாவட்டத் தலைவா் உதயகுமாா்,மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் மதன்குமாா், தமாகா மாவட்ட பொருளாளா் பெருமாள், இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் நகர செயலாளா் ராஜேந்திரன், புரட்சி பாரதம் கட்சி மாநில பொறுப்பாளா் பழனிபாரதி, அமமுக மாவட்ட செயலாளா் வேளியூா் தனசேகரன் கலந்து கொண்டனா்.

அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.வைகைச்செல்வன் விளக்கவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் கே.யூ.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், நகா் செயலாளா் பாலாஜி,பாஜக சாா்பில் ஓம்.சக்தி பெருமாள் கலந்து கொண்டனா்.