காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.
போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரணி நடத்தினா்.
மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழக இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனா்.
சாலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, வண்டலூா் வாலாஜாபாத் சாலை வழியாக சுமாா் இரண்டு கிமீ தொலைவில் உள்ள படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


