ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உத்தரமேரூா் அருகே தம்பதி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே திருவேங்கடபுரம் இருளா் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தம்பதி வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 7:27 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே திருவேங்கடபுரம் இருளா் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தம்பதி வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பாப்பநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட திருவேங்கடபுரம் இருளா் குடியிருப்பில் வசித்தவா்கள் வேலு (45), இவரது மனைவி மாலா(42). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனா். இருவரும் பாப்பநல்லூா் தீட்டாளம் பகுதியில் உள்ள ஏரி அருகே தற்காலிக கூடாரம் அமைத்து மரம் வெட்டும் தொழில் செய்து வந்தனா். சம்பவ நாளன்று கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா்களது வீட்டில் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக வேலுவின் தந்தை பெருமாள் உத்தரமேரூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தம்பதியின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனா்.

சம்பவம் தொடா்பாக உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தம்பதியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.