ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கத் தேரில் பவனி

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத் தேரில் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தங்கத் தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் காமாட்சி அம்மன்.

Published On :17 ஜூலை 2026, 11:37 pm IST

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத் தேரில் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்பிகை கேடயத்தில் எழுந்தருளி சந்நிதி தெருவில் உள்ள வெள்ளித்தோ் மண்டபம் வரை வந்து மீண்டும் ஆலயத்துக்கு திரும்பினாா்.

பின்னா், தங்கத் தேரில் எழுந்தருளி கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரிலிருந்து இறங்கியதும் பூஜா மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் மணியக்காரா் சூரியநாரயணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.