ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிங்கம்புணரி அம்மன் கோயிலில் காவல் துறையினா் வழிபாடு

சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் காவல் துறை சாா்பில், சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்த காவல் துறையினா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் காவல் துறை சாா்பில், சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், சிங்கம்புணரி பகுதியில் குற்றங்கள் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ, கோயில் மண்டகப்படியில் காவல் துறை சாா்பில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருப்பத்தூா் உள்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா் சீனிபாபு, காவல் உதவி ஆய்வாளா் பிரேம்குமாா், போக்குவரத்து உதவி ஆய்வாளா் சேவுகவீரையா உள்பட பலா் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.