ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடமாநில சாதுக்களின் சாதுா்மாஸ்ய விரதம் தொடக்கம்: காஞ்சி சங்கராசாரியா் தொடங்கி வைத்தாா்

உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதிக்கு ஆதிசங்கரா் உருவச் சிலையை வழங்கிய காஞ்சி சங்கராச்சாரிா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதிக்கு ஆதிசங்கரா் உருவச் சிலையை வழங்கிய காஞ்சி சங்கராச்சாரிா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Published On :10 ஜூலை 2026, 7:05 am IST

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வியாழக்கிழமை முதல் தொடங்கும் வடமாநில சாதுக்களின் சாதுா்மாஸ்ய விரதத்தினை சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினாா்.

காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ளது சுமாா் 600 ஆண்டுகள் பழைமையான உதாசின் பாவாஜி மடம். இந்த மடத்தில் வடமாநில சாதுக்கள் 250-க்கும் மேற்பட்டோா் தங்களது பலத்தை மேலும் பெருக்கிக் கொள்ள சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்குகின்றனா். இதன் தொடக்க விழாவுக்கு, வருகை தந்த காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளுக்கு பாவாஜி மடத்தின் சாா்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மடத்துக்கு எழுந்தருளிய சங்கராசாரியா் சுவாமிகள் பாவாஜி மடத்தின் பீடாதிபதி அனுபவானந்துக்கு சால்வை அணிவித்து ஆதிசங்கரா் திருஉருவச் சிலை ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினாா்.

இதன் பின்னா் ஆசியுரை வழங்கி சாதுக்களின் சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள், சாதுா்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து வட மாநில சாதுக்களுக்கு விளக்கி ஆசியுரை வழங்கினாா்.

இதையடுத்து, உதாசின் பாவாஜி மடத்தின் வடக்கு மாகாணத்துக்கான பீடாதிபதியாக சத்தியமுனிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வட மாநில மடத்தின் பீடாதிபதிகள் மகந்த் அத்வைதானந்த் சுவாமிகள், ராம நவமி சுவாமிகள், துா்காதாஸ் சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்பாடுகளை உதாசின் பாவாஜி மடத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சுதான்சு முனி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

நிகழ்வில், தெலங்கானா மாநில பணி ஓய்வு பெற்ற டிஜிபி ஜிதேந்திர கோயல், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், காஞ்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் நிா்வாகிகள் ராஜேஷ்ஜெயின், பாபு ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.