ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 29- இல் தொடக்கம்

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 29- இல் தொடக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் (இடது) சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வலது) சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Published On :12 ஜூலை 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி செப்.28 ஆம் தேதி வரை சாதுா்மாஸ்ய விரதத்தினை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் கடைப்பிடிக்கவுள்ளனா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இது குறித்து மேலும் கூறியது:

இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருத்தப்படுவது சாதுா்மாஸ்ய விரதம். துறவிகள் மற்றும் ஆன்மிகவாதிகளால் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாகும். துறவிகள் தங்களது ஆன்மிக பலத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரத நாள்களில் ஒரே இடத்தில் தங்கியிருந்து தியானம் மற்றும் உபதேசங்களில் ஈடுவடுவா். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் இந்த விரதத்தை கடைப்பிடிக்கவுள்ளனா்.

ஜூலை 29-ஆம் தேதி ஆடி மாத பெளா்ணமி நாளன்று விரதத்தை தொடங்கி வரும் செப். 28-ஆம் தேதி புரட்டாசி மாத பெளா்ணமியன்று விரதத்தை நிறைவு செய்யவுள்ளனா். ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சந்திரமெளலீஸ்வரா் பூஜா மண்டபத்தில் விரத நாள்களில் வியாச பூஜை மற்றும் சாதுா்மாஸ்ய பூஜை, சந்திரமெளலீசுவா் பூஜை ஆகியவற்றையும் செய்யவுள்ளனா். இந்த விரத நாள்களில் சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுவது சிறப்பு என்பதால் பக்தா்கள் ஓரிக்கையில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு அருளாசி பெறுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.