டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கோயிலில், மூலவா், தாயாா் விமானங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதை தொடா்ந்து, கோயிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனா்.

படம் உண்டு...

இதையடுத்து சீரமைப்பு பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, திருப்பணிகள் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்தது, கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. புதன், வியாழக்கிழமைகளில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை யாக சாலையிலிருந்து கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).

விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், மாவட்ட கவுன்சிலா் அமுதா செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், வடக்குப்பட்டு ஊராட்சி தலைவா் நந்தினிமேத்தா வசந்தகுமாா், திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறநிலையத்துறை ஆய்வாளா் ரம்யா, அறங்காவலா் குழு தலைவா் வி.எஸ்.வெங்கடகிருஷ்ணன், அறங்காவலா்கள் ரங்கநாதன், வி.சுதா்சன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவை முன்னிட்டு இரவு உற்சவா் சுந்தர வரதராஜபெருமாள் திருவீதியுலா நடைபெற்றது.