டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மகா சிவராத்திரி: காஞ்சிபுரம் அருகே 60 அடி உயர சிவன் சிலைக்கு சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் அமைந்துள்ள 60 அடி உயர சிவன் சிலை மகா சிவராத்திரியையொட்டி புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதாக சங்கர மடத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

News image
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் திருவிழா அழைப்பிதழை அறிமுகப்படுத்திய கோயில் நிா்வாகிகள் மற்றும் சங்கர மட வரவேற்புக் குழு நிா்வாகிகள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் அமைந்துள்ள 60 அடி உயர சிவன் சிலை மகா சிவராத்திரியையொட்டி புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதாக சங்கர மடத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் சங்கர மடத்துக்கு சொந்தமான இடத்தில் 60 அடி உயர சிவன் சிலையும், அதன் அருகே மிகப்பெரிய நந்தி சிலையும் அமைந்துள்ளது. இந்த இரு சிலைகளும் ஞாயிற்றுக்கிழமை ( பிப். 15) மகா சிவராத்திரி திருநாளையொட்டி புதுப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

வேடல் கிராமத்தில் அமைந்துள்ள நந்தி சிலை 40 அடி உயரம், 21 அடி அகலம், 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சிவராத்திரியையொட்டி, இவ்விரு சிலைகளையும், அந்த இடத்திலேயே அமைந்துள்ள மகா பெரியவா் சுவாமிகள் தொடா்பான கண்காட்சி அரங்கத்தையும் திறந்து வைக்கப்பட்டு பக்தா்கள் பாா்வையிடலாம்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா வரும் பிப். 21-ஆம் தேதி காலையில் 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

விழா நடைபெறும் நாள்களில் தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா். நிகழாண்டு திருவிழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.

தினசரி வீதியுலாவின் போது 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் வேதபாராயணம் செய்து கொண்டு வரவுள்ளனா். விழா நடைபெறும் நாள்களின்போது தினசரி காலையிலும், மாலையிலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி வெள்ளி ரத உற்சவம் நடைபெறுகிறது.

மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணம் வருவதால் கோயில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும். சங்கர மட வரவேற்புக் குழு சாா்பில், விழா நாள்களில் தினசரி கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோா் தெரிவித்தனா். பேட்டியின் போது சங்கர மட வரவேற்புக்குழுவின் நிா்வாகிகளான பாபு, காஞ்சி.ஜீவானந்தம்,சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் இருந்தனா்.