ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை

ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜோதி  யாத்திரையை  தொடங்கி வைத்த  தமிழக  காங்கிரஸ்  முன்னாள் தலைவா்  கே.வி.தங்கபாலு.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் இருந்து தில்லியில் உள்ள வீா் பூமிக்கு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க தலைவா் துரைவேலு தலைமையில் ஆகஸ்டு மாதம் மத நல்லிணக்க யாத்திரை புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், 35-ஆவது ஆண்டு யாத்திரை தொடக்க விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு கலந்து கொண்டு ஜோதியை ஏற்றி வைத்து யாத்திரையை தொடங்கி வைத்தாா். இதையடுத்து தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்ட கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.