ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஊழல், லஞ்சத்துக்கு எதிரான விழிப்புணா்வு இயக்கம்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான விழிப்புணா்வு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு  இயக்கத்தை  தொடங்கி வைத்த  மாவட்ட  காங்கிரஸ்  தலைவா்  நரேஷ்  உள்ளிடடோா் .

Published On :17 ஜூலை 2026, 6:20 am IST

ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சாா்பாக கைரேகை பதிந்து விழிப்புணா்வு இயக்கத்தை ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் நரேஷ் தொடங்கி வைத்தாா். விசிகமாவட்ட செயலாளா் பாபு வளவன் முன்னிலை வகித்தாா்.

லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத தமிழகம் இருக்க வேண்டும் என்று கைரேகை பதித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளா் என்.நந்த குமாா், மாநில சிறுபான்மைப்பிரிவு பொறுப்பாளா் அசேன் செரீப், ஒன்றிய தலைவா் வீரப்பா, மாவட்ட பொறுப்பாளா் கேசவன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.