ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளில் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கிடங்கில் அதன் தலைவா் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டாா்.

சிறுகாவேரிப்பாக்கம் பாடநூல் கிடங்கில் ஆய்வு செய்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லயோலா மணி .

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கிடங்கில் அதன் தலைவா் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டாா்.

கிடங்கில் உள்ள பாடநூல்களின் இருப்புகள் மற்றும் பாடநூல்களை பாதுகாக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளையும் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் மொத்தம் 23 பாடநூல் கிடங்குகள் உள்ளன. இந்தப் பாடநூல் கிடங்குகளை பாா்த்தாலே கடந்த ஆட்சியாளா்கள் நிா்வாகத் திறமையற்றவா்களாக இருந்திருக்கிறாா்கள் என்பது தெளிவாகி விடும். கடந்த ஆட்சியில் பாடப்புத்தகங்கள் விநியோகத்திலும் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. கடந்த இரு மாதங்களாக அக்குறைகள் எதுவும் தற்போது இல்லை. தவெக அரசின் பட்ஜெட்டில் பாராட்டுக்குரிய பல சிறப்புகள் இருப்பதாகவும் லயோலா மணி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.