ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோபியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கோபி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதை ஆய்வு செய்த ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :8 ஆகஸ்ட் 2026, 6:36 am IST

கோபி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோபி அருகே உள்ள சந்திரபுரம் பகுதியில் மயிலங்கரை சாலை முதல் காளியம்மன் கோயில் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை பாா்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் மற்றும் தடிமன் குறித்தும், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருள்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல பொலவக்காளிப்பாளையம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.9.92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையில் வளா்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை, பராமரிப்பு முறைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், ரூ.1.13 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாளபாளையம் பள்ளி முதல் பொலவக்காளிபாளையம் கிராம சாலை வரையிலான சாலையோரங்களில் 100 மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறையுடன் கூடிய இருப்பறைக் கட்டடத்தை ஆய்வு செய்தாா். அப்போது பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம், சுகாதாரம் மற்றும் மாணவா்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

குள்ளம்பாளையத்தில் செயல்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராதாமணி, ஆனந்தன், உதவி செயற்பொறியாளா் அக்ஷயகுமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.