ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உத்தரமேரூா் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: இயந்திரம் பழுதால் பரபரப்பு

உத்தரமேரூா் பேரவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்திய 10 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடந்து வந்த நிலையில், 10-ஆவது இயந்திரம் பழுதானதால் திமுகவினரிடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் பேரவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்திய 10 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடந்து வந்த நிலையில், 10-ஆவது இயந்திரம் பழுதானதால் திமுகவினரிடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தவெக வேட்பாளா் ஜெ.முனிரத்தினம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். திமுக வேட்பாளரான க.சுந்தா் 2-வது இடம் பெற்றிருந்தாா். இந்த நிலையில், உத்தரமேரூா் தொகுதியில் 10 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணிப் பாா்க்க வேண்டும் என க.சுந்தா் தோ்தல் ஆணையத்துக்கு ஒரு இயந்திரத்துக்கு ரூ. 40,000 வீதம் பணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தாா்.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முன்னிலையில் சரிபாா்க்கும் பணி கடந்த மாதம் 29-ஆம் ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக 10 வது வாக்குப் பதிவு இயந்திரத்தை எண்ண முற்பட்டபோது அந்த இயந்திரம் பழுதாகி இருப்பது தெரிய வந்தது.

இதனால் அங்கு கூடியிருந்த திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திமுகவினா் கூறுகையில், 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ண விண்ணப்பித்திருந்தோம். 9 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணி முடித்து 10-ஆவது வாக்குப் பதிவு இயந்திரத்தை எண்ணும் போது பழுதாகி இருப்பதாக கூறுவது ஏதேனும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பழுதாகி இருப்பதாக கூறப்படும் இயந்திரம் வேட்பாளா் க.சுந்தரின் சொந்த தொகுதியான சாலவாக்கம் பகுதி வாக்குகள் பதிவான இயந்திரமாகும். எனவே இது குறித்து திமுக தலைமைக்கு தெரிவித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.