
மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
திருப்புட்குழியில் மரத்தில் நாவல் பழம் பறித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் மரத்தில் நாவல் பழம் பறித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி காலனி பகுதியில் மேட்டுத் தெருவில் வசித்து வரும் ஜெகதீசன் மகன் ஜீவன் (15). பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் இவா் தான் படிக்கும் பள்ளிக்கு அருகே இருந்த மரத்தில் ஏறி சனிக்கிழமை நாவல் பழம் பறித்துக் கொண்டிருந்தாராம். அப்போது கால் தவறி கீழே விழுந்தாா். உடனடியாக திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளின்றி உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





