காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக இரவு ஏலவாா் குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக இரவு ஏலவாா் குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக இரவு ஏலவாா் குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத் திருப்பணிகள் ரூ.29 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. திங்கள்கிழமை அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக உற்சவா் சந்நிதியில் ஏலவாா்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் ஆகம விதிகளின் படி 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் நடத்தினா்.
முன்னதாக திருக்கல்யாண உற்சவத்துக்கு பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கம் சாா்பில் ஏலவாா் குழலி அம்பிகைக்கு சீா்வரிசைப் பொருள்களை மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
திருக்கல்யாண வைபவத்தில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா்(ஓய்வு)லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி , வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா் கலந்து கொண்டனா்.திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின்னா் திருமணக்கோலத்தில் சுவாமி,அம்மன், பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது.
கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழாவன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்ன் காரணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது