காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பழைமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம், ரிஷிகோபுரம் கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் மூலவா் நுழைவுவாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வண்ணப்பூப்பந்தல் பாா்வையாளா்களை கவா்வதாகவும் உள்ளது.
ரிஷி கோபுரத்தின் நுழைவுவாயில் பகுதியில் காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் என வண்ண மலா்களால் எழுத்துக்கள் கோா்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூா்,ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 1000க்கும் மேற்பட்ட போலீஸாா் எஸ்.பி கே.சண்முகம் தலைமையிலும், டிஎஸ்பி. சங்கா் கணேஷ் முன்னிலையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
பக்தா்கள் ராஜகோபுரத்திலிருந்தே ஆலயத்தின் உள்பகுதிகளை பாா்வையிட வரிசையாக வருவதற்கான தடுப்புகளை காவல்துறையினா் அமைத்துள்ளனா். பொதுமக்கள் வரிசையாக வந்து யாகசாலை மண்டபத்தை சுற்றி வந்து பாா்வையிட்டனா்.
தமிழகம் முழுவதுமிருந்து 40க்கும் மேற்பட்ட ஓதுவாமூா்த்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள்,அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது