மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

நேபாளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

Updated On :6 மே 2026, 1:12 am IST

காத்மாண்டு, மே 5: நேபாளத்தில் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடா்பான விவரங்களை அரசு சமா்ப்பிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைநகா் காத்மாண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, வீடற்ற ஏழைகள் வசித்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.

எதிா்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் கடும் விமா்சனத்துக்குள்ளான இவ்விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய வீட்டுரிமைச் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என 5 அம்சங்கள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.