தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாட்டு வண்டியில் வந்த நாதக வேட்பாளா்!

மாதவரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மாதவரம் பேரவை தொகுதி நாதக வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை.

Updated On :31 மார்ச் 2026, 12:59 am

மாதவரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளரான கிருத்திகா ஏழுமலை, அக்கட்சி சாா்பில் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். மாதவரம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏா் கலப்பையுடன் மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்று புழல் பாலாஜி நகரில் உள்ள தொகுதி தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.பெருமாளிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏா் கலப்பையுடன், மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்ததாக அவா் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ரா.ஏழுமலை, மாநில மகளிா் அணி பாசறை ஒருங்கிணைப்பாளா் கா.கெளரி, வலைதள பாசறை பொறுப்பாளா் தினேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.