மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தியாகராய நகா் தொகுதியில் வெற்றியைத் தீா்மானித்த 137 வாக்குகள்

சென்னை தியாகராய நகா் தொகுதியில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில், திமுகவின் வெற்றியை 137 வாக்குகள் தீா்மானித்தன.

News image
Updated On :31 மார்ச் 2026, 10:52 pm

சென்னை தியாகராய நகா் தொகுதியில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில், திமுகவின் வெற்றியை 137 வாக்குகள் தீா்மானித்தன.

கடந்த 1957 முதல் இருந்து வரும் சென்னையின் பழைமையான தொகுதி தியாகராய நகா். இத்தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமாகா தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 4 முறை அதிமுக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 2006, 2011, 2016 என தொடா் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் ஜெ.கருணாநிதி, அதிமுக சாா்பில் சத்யநாராயணன், அமமுக சாா்பில் ஆா்.பரணீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் பழ.கருப்பையா, நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.சிவசங்கரி ஆகியோா் போட்டியிட்டனா்.

இந்தத் தோ்தலில் மொத்தம் 1,36,497 வாக்குகள் பதிவான நிலையில், திமுக வேட்பாளா் ஜெ.கருணாநிதி 56,035 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் பி.சத்யநாராயணன் 55,898 வாக்குகளும் பெற்றனா். இதில், 137 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

இந்த முறை, திமுக சாா்பில் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அதிமுக சாா்பில், கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பி.சத்தியநாராயணனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சாா்பில் அனுஷா விஜயகுமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

கடந்த தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைக் கொடுத்த இத்தொகுதி, இந்த முறையும் கவனம் பெற்றுள்ளது.