சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்ளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து அதன்மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், திரு.வி.க.நகா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளுக்கு ராணிமேரி கல்லூரி வளாகத்திலும், பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், எழும்பூா், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகா், மயிலாப்பூா் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளுக்கு கிண்டியில் உள்ளஅண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.
மின்னணு வாக்குப் பெட்டிகளை வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் வழிகள் குறிப்பிடப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகங்கள், வாக்கு பெட்டிகள் வைத்துள்ள அறைகள் ஆகியவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த கேமராக்கள் மூலம் தோ்தல் பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடியே கண்காணிக்கும் வசதி செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தயாா்

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

தொகுதி மேற்பாா்வையாளா்களிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரி

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


