லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடல்சார் துறைகளில் சுயசார்பு அதிகரிக்க சென்னை ஐஐடி உதவி: வி.காமகோடி

கடல் பொறியியல் துறை, கடல்சார் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு சுயசார்பு தளங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி உதவியாக உள்ளது என அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

News image
Updated On :17 மார்ச் 2026, 9:22 pm

கடல் பொறியியல் துறை, கடல்சார் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு சுயசார்பு தளங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி உதவியாக உள்ளது என அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-இன் கடல் பொறியியல் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது:

1977-ஆம் ஆண்டு "கடல் பொறியியல் மையம்' ஐஐடியில் தொடங்கப்பட்டு, பின்னர் 1982-ஆம் ஆண்டில் ஒரு முழுமையான துறையாக உருவாக்கப்பட்டது. கடல்சார் பொறியியல், கப்பல் வடிவமைப்பு போன்ற கல்வியோடு, கடலோர தொழில்நுட்பம் ஆராய்ச்சி மேம்பாட்டுடன் இந்தத் துறை வளர்ந்துள்ளது.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள், துறைமுக மேம்பாட்டு ஆய்வுகள், தூர்வாரும் பணிகள் குறித்த மதிப்பீடுகள், கடல்சார் நீரியக்கவியல் ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல தேசிய திட்டங்களுக்கு இந்தத் துறையின் நிபுணத்துவம் பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

நமது நாட்டின் பல்வேறு நிறுவனங்களுக்கு சுயசார்பு தளங்களை சென்னை ஐஐடி வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் நாடு, "நீலப் பொருளாதாரம்', ஆழ்கடல் ஆய்வுத் திட்டம், கப்பல் கட்டுமானம், பசுமைத் துறைமுக மேம்பாடு, பருவநிலை மாற்றத்துக்கு தகுந்த கடலோரப் பகுதியின் தாங்கும் திறனை மேம்படுத்தல் ஆகியவற்றின் மீது தனது கவனத்தை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், ஐஐடியின் கடல் பொறியியல் துறைத் தலைவர் அப்துஸ் சமத், பொன்விழா நிகழ்வுகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான எஸ்.ஏ.சன்னசிராஜ், சர்வதேச கடல்சார் தொழில்நுட்பச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஆஸ்ட்ராண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த ஓராண்டுக்கான பொன்விழாக் கொண்டாட்டங்கள், கல்வி நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள், சென்னை ஐஐடி சார்பில் நாட்டில் மேற்கொண்டுவரும் அதிநவீன உள்கட்டமைப்புகள் போன்ற விவரங்களும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.