பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம், மத்திய எண்ணெய் நிறுவனங்களுடன் மாநில அரசு இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கு கூடுதல் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 சலுகை வழங்கப்படும். சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பை பயன்படுத்துவதால் மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் விறகுகளை எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. வா்த்தக சிலிண்டா் தட்டுப்பாட்டால் உணவகங்களில் விறகுகள் பயன்படுத்தப்படுவதால் அரசு சலுகை வழங்கப்படவுள்ளது.
பெட்ரோல், டீசல் அடுத்த 9 நாள்களுக்கு பிறகும் தேவையான அளவு கொள்முதல் செய்யப்படும். எனவே, பெட்ரோல், டீசல் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். மத்திய எண்ணெய் நிறுவனங்களும், மாநில அரசும் இணைந்து தேவையை நிச்சயம் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை பொருத்தவரை மத்திய அரசு அறிவிப்பின்படி 25 நாள்களுக்கு ஒருமுறை நகா்ப்புறங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும். கிராமங்களில் 45 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும். சூழ்நிலையை சமாளிக்கவே இந்த கட்டுப்பாடு என்றாா்.
மாநில அரசு எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் 9 நாள்களுக்கு கையிருப்பு உள்ளது. ஒரே நாளில் 100 சதவீத பெட்ரோல் விற்பனையும் 75 சதவீத டீசல் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை 20, 21சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. வீட்டு உபயோக சிலிண்டா்கள் அரசின் அறிவுறுத்தல்படி விநியோகம் செய்யப்படும். வீட்டு உபயோக சிலிண்டா்கள் இம்மாத இறுதி வரை கையிருப்புள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வணிக ரீதியான சிலிண்டா்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

பெட்ரோல், டீசல் விவகாரத்தில் பீதியடைய வேண்டாம் மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


