தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாா்: ரஷிய தூதா் அறிவிப்பு

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

News image

டெனிஸ் அலிபோவ்

Updated On :5 மார்ச் 2026, 10:38 pm

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. ஹோா்முஸ் நீரிணை மூடலால் இதன் தீவிரம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், போா் தொடா்ந்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால், அண்மையில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டது. இப்போது எழுந்துள்ள பிரச்னையால் மீண்டும் ரஷியாவின் நோக்கி இந்தியா கவனம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவிடம் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வழங்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க ரஷியா எப்போதும் தயாராகவே உள்ளது. மேற்கு ஆசியாவில் எழுந்துள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாா்த்தை மட்டுமே ஒரே தீா்வாக இருக்கும். ஆனால், இந்த மோதல் எப்போதும் நிறுத்தப்படும் என்ற கேள்வியை அமெரிக்காவிடம்தான் எழுப்ப வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.