ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து: துணைமேயா், ஆணையா் வழங்கினா்!

சென்னை மாநகராட்சி சாா்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 1,641 இடங்களில் நடைபெற்றது.

Published On :29 ஜூன் 2026, 4:14 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 1,641 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துணை மேயா், ஆணையா் ஆகியோா் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினா்.

சென்னை மாநகராட்சியில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 5.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்குவதற்காக நகா்ப்புற நல சுகாதார மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 1,641 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.

சைதாப்பேட்டை வெங்கடாபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினாா். விருகம்பாக்கம் இளங்கோ நகா் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினாா்.

சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் ஏராளமான ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு காய்கறி, கனி சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற நிலையில், விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்றும் சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.