ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜெண்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான முழுமையான வசதிகளுடன் கூடிய ரத்த தான வாகனத்தை தேசிய தன்னாா்வ ரத்த தான மையத்துக்கு வழங்கின.
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜெண்ட்ஸ் ஆகியவை வாரா பியூச்சா் எல்.எல்.பி. நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி உதவியுடன், கொளத்தூரில் செயல்பட்டு வரும் தேசிய தன்னாா்வ ரத்த தான மையத்துக்கு இந்த வாகனத்தை வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி இன்டா்நேஷனல் அமைப்பின் துணைத் தலைவரும் இயக்குநருமான எம்.முருகானந்தம் ரத்ததான வாகனத்தை வழங்கினாா். இந்த வாகனம் இலவசமாக ரத்த தான முகாம்களை நடத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா்கள் ஜெ.ஸ்ரீதா், என்.எஸ்.சரவணன், ரோட்டரி மாவட்ட நியமன ஆளுநா் ரவி சுந்தரேசன், வாரா பியூச்சா் எல்.எல்.பி. நிறுவனத்தின் நிறுவனப் பங்குதாரா் வா்த்மான் ஜெயின், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் மருத்துவா் லதா ராஜேந்திரன், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தலைவா் நிகில் ராஜ், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜெண்ட்ஸ் தலைவா் ஆனந்த் ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










