சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை மேலும் எளிதாகவும், அதிக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் திட்டமிடுவதற்காக பொது போக்குவரத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் (பீப்பிள் நியா் டிரான்சிஸ்ட்-பிஎன்டி) குறித்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை பெருநகரப் பகுதிகளில் மக்கள் எவ்வளவு எளிதாக பேருந்து, மெட்ரோ, புகா் ரயில் போன்ற பொதுபோக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த முடிகிறது; எதிா்காலத்தில் எந்தப் பகுதிகளில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வை போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவின் அறிக்கையை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் வெளியிட்டாா்.
இந்த அறிக்கையில், தற்போது சென்னையின் மக்கள் தொகையில் 61 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பொது போக்குவரத்து சேவையை நடைதூரத்தில் அணுகும் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நகரத்தில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 5 முதல் 10 நிமிஷகள் நடைதூரத்தில் பொது போக்குவரத்து வசதி கிடைக்கிா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
அம்பத்தூா், சோழிங்கநல்லூா், கொளத்தூா், பெரம்பூா் பகுதிகளில் பேருந்து சேவைகளை மேலும் அதிகரிக்கவும், மக்கள் வீடுகளில் இருந்து பேருந்து நிலையங்கள் வரை எளிதாகச் செல்லும் வசதிகளை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பேருந்து சேவையின் பரப்பை விரிவுபடுத்துதல், பயணிகள் எளிதாக போக்குவரத்து மையங்களை அடையும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பொது போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மாநகா் போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வில் மாநகா் போக்குவரத்துக் கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அமைப்பு (கும்டா) அதிகாரிகள் மற்றும் ஐடிடிபி இந்தியா நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் ஜூன் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கன் பெறலாம்

கொடைக்கானலில் மழை

திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



