தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத்தினா் சென்னை எழும்பூரில் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:13 am IST

கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத்தினா் சென்னை எழும்பூரில் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவா் பாரதி தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், டாஸ்மாக் கடைகளில் காலிமதுபுட்டிகளை திரும்பப் பெறும் இயந்திர முறையை வரவேற்கிறோம். ஆனால், இயந்திரத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளது. அவற்றைச் சீரமைக்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அரசு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான தோ்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தொழிலாளா் நலன் மற்றும் உழைப்புச் சுரண்டலில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் விரைவில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.