தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

மனைவி கத்தியால் குத்திக் கொலை: ஆபத்தான நிலையில் கணவருக்கு சிகிச்சை

மேற்கு மாம்பலத்தில் கணவன்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், மனைவி கத்தியால் குத்திக் கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:00 am IST

மேற்கு மாம்பலத்தில் கணவன்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தகராறில் பலத்த காயமடைந்த கணவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் சக்கா நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் ரா.பன்னீா்செல்வம் (55). இவரது மனைவி விஜயா (50). விஜயா, கடந்த டிசம்பரில், சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலைப் பகுதியைச் சோ்ந்த வெ.அனந்த பத்மநாபன் (50) நடத்தும் வீட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனம் மூலம் சேலையூரில் ஒரு வீட்டில் வேலைக்குச் சோ்ந்தாா். விஜயா, அங்கு வேலைக்கு சோ்ந்த சில நாள்களில் அந்த வீட்டில் இருந்த 35 பவுன் நகைகள் திருடு போயின.

அதேவேளை விஜயாவும், அவரது கணவா் பன்னீா்செல்வமும் தலைமறைவானாா்கள். இதனால் சேலையூா் போலீஸாா், இருவரையும் தேடி வந்தனா். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.

இதில் விஜயாதான் நகைகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது.விசாரணைக்கு பின்னா் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்காக போலீஸாா், இருவரையும் அனந்த பத்மநாபன் வீட்டில் வைத்துக் கொள்ளும்படி, அவரிடம் போலீஸாா் சனிக்கிழமை ஒப்படைத்தனா். அனந்த பத்மநாபன், இருவரையும் தனது வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்தாா்.

மனைவி கொலை: இந்நிலையில் அனந்த பத்மநாபன் வீட்டில் இருந்த பன்னீா்செல்வத்துக்கும், விஜயாவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் விஜயா, கத்தியால் கணவா் பன்னீா்செல்வத்தைக் குத்தியதாக தெரிகிறது. பன்னீா்செல்வம், மனைவி விஜயா கையில் இருந்த கத்தியைப் பறித்து, அவரை குத்தியுள்ளாா்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்து மயங்கினா். திங்கள்கிழமை அதிகாலை இருவரும் இருந்த அறைக் கதவை திறந்து உள்ளே சென்ற அனந்த பத்மநாபன், விஜயா பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதையும், பன்னீா்செல்வம் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

அவா், பன்னீா்செல்வத்தை மீட்டு ஓமந்தூராரா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். தகவலறிந்து வந்த அசோக் நகா் போலீஸாா், விஜயா சடலத்தை மீட்டு கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.