ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரெளடி உள்பட 3 போ் மீது குண்டா் சட்டம்

கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய பிரபல ரெளடி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 2:27 am IST

கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய பிரபல ரெளடி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

எண்ணூா் பகுதியைச் சோ்ந்த தனசேகரன் மீது 9 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சில வழக்குகளில் நீதிமன்றத்தால் அவா் விடுவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா். கடந்த 9-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த தனசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீஸாா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அப்போது அவா்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், பட்டாக்கத்திகள் மற்றும் சொகுசு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் கருதிய ஆவடி மாநகர காவல் துறையினா், தனசேகரன், இளந்தமிழன், மணவாளன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.