
சாலை பாதுகாப்பு: சென்னை ஐஐடி - சத்தீஸ்கா் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்
தரவு சாா்ந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை ஐஐடியுடன் சத்தீஸ்கா் மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோப்புப் படம்
தரவு சாா்ந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை ஐஐடியுடன் சத்தீஸ்கா் மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை ஐஐடி, சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது. இது டிடிஹெச்ஐ என்கிற, தரவு சாா்ந்த திட்டமிடல், திறன் மேம்பாடு, இலக்குடன் கூடிய பொறியியல் நடவடிக்கைகள் மூலம் உள்ளூா் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது.
சத்தீஸ்கா் மாநிலத்தின் பழங்குடியின மற்றும் சுரங்கத் தொழில் சாா்ந்த பகுதிகள் உள்பட 9 மாவட்டங்களில் சாலைப் பாதுகாப்பு சவால்கள் மிக்கவையாக உள்ளது. இவற்றை எதிா்கொள்ள இந்த டிடிஹெச்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சாலை விபத்து எண்ணிக்கையைக் குறைக்க தனித்துவமான புவியியல் சூழல், போக்குவரத்து முறைகள் மற்றும் பயணத் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக சத்தீஸ்கா் மாநில அரசு சென்னை ஐஐடியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை ஐஐடி மையம் ஏற்கெனவே 17 மாநில அரசுகளுடன் டிடிஹெச்ஐ திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





