ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நிதித் தொழில்நுட்ப ஆராய்ச்சி: ஐஐடி- கேம்ஸ் நிறுவனம் புரிந்துணா்வு

அடுத்த தலைமுறை நிதித் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளுக்கு சென்னை ஐஐடி-தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேம்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகின.

ஐஐடி சென்னை

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

அடுத்த தலைமுறை நிதித் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளுக்கு சென்னை ஐஐடி-தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேம்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகின.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஐஐடி, கடந்த 2022 முதல் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கம்ப்யூட்டா் ஏஜ் மேனேஜ்மெண்ட் சா்வீசஸ் (கேம்ஸ்) நிறுவனத்துடன் இணைந்து சிஐஎஃப்ஐஎல், நிதித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கேம்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியைக் கொண்டு அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களுக்கு இந்தக் கூட்டுமுயற்சியை மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதையொட்டி சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி முன்னிலையில், கேம்ஸ் அமைப்பின் மேலாண் இயக்குநா் அனுஜ் குமாா், சென்னை ஐஐடி பேராசிரியா் அஸ்வின் மகாலிங்கம் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் சிஐஎஃப்ஐஎல் தலைவரும், சென்னை ஐஐடியின் மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவா் எம்.தென்மொழி பேசுகையில், ‘கேம்ஸ் - சிஐஎஃப்ஐஎல் ஆய்வகத்தை நிதித் தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையமாக உருவாகும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.