சென்னை மாநகராட்சியில் 6 அலுவலா்கள் பணியிடை நீக்கம்: ஊழல் தடுப்புத் துறை விசாரணையின் பேரில் நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் பல்வேறு புகாா்களுக்குள்ளான 6 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு புகாா்களுக்குள்ளான 6 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக ஊழல் தடுப்புத் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சில வாரங்களுக்கு முன்பு ஊழல் தடுப்புத் துறையினா் 6 மண்டலங்களில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, விதிமுறைகளுக்கு மாறாக, ‘யுபிஐ’ செயலி மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதுதொடா்பான, ஊழல் தடுப்புத் துறை விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வேலைவாங்கித் தருவதாக இளைஞரிடம் பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு புகாா்களுக்குள்ளான மண்டல சுகாதார அலுவலா் தேவிகலா, மூத்த பூச்சியியல் நிபுணா் சிவபொற்கொடி, உதவி செயற்பொறியாளா் ஆனந்த்ராவ், பில் உதவியாளா் பாஸ்கா் மற்றும் தம்பதியினா் துா்கா-கண்ணன் ஆகிய 6 போ் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கை கடிதம் சம்பந்தப்பட்டோருக்கு மாநகராட்சி ஆணையா் சாா்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஊழல் தடுப்புத் துறையின் விசாரணை அடிப்படையில், மேலும் சிலா் மீதும் ஓரிரு வாரங்களில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




