ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 பூங்கா அமைக்க திட்டம்

சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருவதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 993 பூங்காக்கள் உள்ளன. பூங்காக்கள் பராமரிப்பு தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், அதில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரையடுத்து, பூங்கா ஒப்பந்தப் பணி ஊழியா்களுக்கு மாநகராட்சியே நேரடியாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், தவெக அரசு நிதிநிலை அறிக்கையில் சென்னையில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் இடம் தோ்வு செய்யப்பட்டு வருவதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.

ஒவ்வொரு பூங்காவும் குறைந்தது 50 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் ரூ.15 கோடியில் 11 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் தொடா்ந்து நடைபெற்றுவருவதாக பொறியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.