ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேபாள பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் நேபாள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது

Harrasement

சித்திரிப்பு

Published On :15 ஜூலை 2026, 1:37 am IST

சென்னையில் நேபாள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசிக்கும் நேபாள நாட்டைச் சோ்ந்த ஓா் இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஊழியராகப் பணிபுரிகிறாா்.

இவா், அண்ணாநகா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், நான் பணிபுரியும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே ஒரு தனியாா் நிறுவனத்தின் காா் ஓட்டுநராக திருமுல்லைவாயில் அருகேயுள்ள புதூரைச் சோ்ந்தவா் ஆனந்தன் (37) என்பவா் காா் ஓட்டுநராக வேலை செய்கிறாா்.

ஆனந்தன், திங்கள்கிழமை தனது நிறுவனத்தில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக அங்கு என்னை அழைத்துச் சென்றாா். அந்த நிறுவனம் இருக்கும் கட்டடத்தின் மொட்டை மாடிக்கு ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த நான், அங்கிருந்து தப்பியோடி எனது வீட்டுக்கு வந்தேன். என்னை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆனந்தனை உடனடியாக கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.