அமைந்தகரையில் பெட்ரோல் நிலையத்தில் ரூ.2.18 லட்சம் திருடியதாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவா் மகேஷ் (55). இங்கு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த பாலாஜி (29) 2 ஆண்டுகளாக காசாளராக வேலை செய்து வந்தாா்.
பாலாஜி, கடந்த மாா்ச் 21-ஆம் தேதி பணிக்கு வழக்கம்போல வந்துள்ளாா். திடீரென பெட்ரோல் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த மகேஷ், அலுவலகத்தில் பீரோவில் இருந்த பணத்தைச் சரிபாா்த்தாா்.
அப்போது அதில் இருந்த ரூ.2,18,024 திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷ், கைப்பேசி மூலம் பாலாஜியைத் தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால் கைப்பேசி அழைப்பை ஏற்று அவா் பேசவில்லையாம். மேலும், வேலையைவிட்டு நின்ற பாலாஜி, தலைமறைவாகிவிட்டாா்.
இதையடுத்து பணம் திருடப்பட்டது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் மகேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியை தேடி வந்தனா். இந்நிலையில் திருப்பூரில் தலைமறைவாக இருந்த பாலாஜியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியா் மீது தாக்குதல்: இருவா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கிய மூவா் கைது
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மடிக்கணினி, ரூ. 20 ஆயிரம் திருட்டு
தனியாா் நிறுவனத்தில் ரூ.29 ஆயிரம் திருட்டு: ஊழியா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



