நடிகா் ரவி மோகனின் வீட்டில் திருடப்பட்ட வழக்கில், காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ரவி மோகனின் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம், வைரச் சங்கிலி மாயமானது தொடா்பாக, அவரது மேலாளா் போலீஸில் புகாா் அளித்தாா். அதில், வீட்டில் பணியாற்றி வந்த உதவியாளா், பணிப்பெண் உள்ளிட்ட 5 போ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ரவி மோகனின் காா் ஓட்டுநரான ரமேஷ் என்பவா் திருட்டில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், ரூ.2.50 லட்சம் பணத்தை திருடியதை அவா் ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸாா், திருடப்பட்ட மீதமுள்ள பணம் மற்றும் வைரச் சங்கிலியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரவி மோகனின் கராத்தே பாபு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

பணிப் பெண் அடைத்து வைப்பு: நடிகா் ரவி மோகனிடம் போலீஸாா் விசாரணை
திருமண பிரச்னை குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



