தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு பயிலரங்கு
குடிமக்களின் வாழ்க்கை நிலைமைகள் , வருமானப் பங்கீடு குறித்த விரிவான தகவல்களை வழங்க முதல்முறையாக தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துகிறது.


குடிமக்களின் வாழ்க்கை நிலைமைகள் , வருமானப் பங்கீடு குறித்த விரிவான தகவல்களை வழங்க முதல்முறையாக தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துகிறது. இந்த எண்ம கணக்கெடுப்புப் பணிகளுக்கான தயாா் நிலைக்கு இரு நாள் பயிலரங்கு சென்னையில் நடைபெற்றது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), முதல்முறையாக நடத்தும் தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு (என்ஹெச்ஐஎஸ்) மட்டுமன்றி பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பையும் (எஎஸ்ஐஎஸ்எஸ்இ) நடத்துகிறது.
இந்தக் கணக்கெடுப்புகள் நிகழாண்டு ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்திற்கு நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவிலான இந்த கணக்கெடுப்புகள், நீண்டகால தரவு இடைவெளிகளை களையும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு ஏற்கெனவே தொன்னூறுகளில் தொடங்கப்பட்டு அது முழுமையடையாமல் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் நாடு முழுவதும் எண்ம முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு பணிகளுக்கான களப்பணிகளை தொடங்கும் முன்பு அகில இந்திய அளவில் உள்ள 6 மண்டலங்களின் 57 பிராந்தியங்கள் மற்றும் 116 துணை பிராந்திய அதிகாரிகளுக்கான ஆயத்தப் பயிற்சி ஜன. 28, 29 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
எஸ்எஸ்ஓவின் இயக்குநா் ஜெனரல் கீதா சிங் ரத்தோட் இந்த அகில இந்திய பயிற்றுநா்கள் பயிலரங்கை தொடங்கிவைத்தாா். மற்றும் கூடுதல் இயக்குநா் ஜெனரல்கள் அஜய் பக்ஷி உள்ளிட்ட பல்வேறு நிபுணா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...