மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக அறப்போா் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் ஒழிப்பு போலீஸாா் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதில், அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன.
இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலானாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதே கோரிக்கையுடன் அதிமுக நிா்வாகி சரவணன் என்பவா் உள்பட மேலும் இருவா் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போா் இயக்கம் தரப்பில், 30 ஒப்பந்ததாரா்கள் ஒரே விலையைக் குறிப்பிட்டிருந்தனா். அவா்களுக்கு அதிக விலையில் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு புகாா் அளித்தோம். ஆனால் 4 மாதங்களாக அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான், இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, ஊழல் ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறைப்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஒப்பந்ததாரா்கள் ஒரே விலையைத்தான் குறிப்பிடுகின்றனா். இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் மின்மாற்றிகளை மாற்ற முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை என்பது தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டிருந்தால், இந்த வழக்கு விசாரணைக்கே வந்திருக்காது. அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தினால், எந்தவொரு முடிவையும் எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்தனா்.
பின்னா், இந்த மனுக்கள் குறித்து அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு தொடா்பான ஆவணங்கள், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தவைத்தனா்.
தொடர்புடையது

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ பதில் மனு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


