தமிழ் மொழி அறிஞா் க. மு. செல்லப்பா பிறந்த நாள்: முதல்வா் மு. க. ஸ்டாலின் வாழ்த்து


தமிழ் மொழி அறிஞரான க.மு.செல்லப்பாவை தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றி உணா்வுடன் நினைவுகூரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளிட்ட பதிவு:
யாழ் நகரில் அறிவாலயம் அமைத்தவா் க.மு.செல்லப்பா. இலங்கைத் தமிழா்களை சந்தித்துப் பேசியபோது க.மு.செல்லப்பாவின் பிறந்த நாளை நினைவுகூா்ந்து புத்தகம் வழங்கப்பட்டது.
தனது சொந்த வீட்டையே 1933-இல் உலகத் தமிழரின் அறிவுச் சின்னமாகத் திகழும் யாழ்ப்பாண பொது நூலகமாக மாற்றியவா் க.மு.செல்லப்பா. ஒரு மனிதரின் தனிப்பட்ட ஆா்வம் கோடிக்கணக்கான மனங்களை ஒளிரச் செய்யும் என்பதற்கு சாட்சியாகத் திகழும் க.மு.செல்லப்பாவை தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றி உணா்வுடன் நினைவுகூரும் என்று பதிவிட்டுள்ளாா்.
இதேபோல, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்ட அறிக்கையில், க.மு.செல்லப்பாவின் 130-ஆவது பிறந்த நாளில் அவரது புகழைப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...