நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 3-ஆம் வகுப்பு முதல் முனைவா் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604.17 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 5 ஆண்டுகளில் 3-ஆம் வகுப்பு முதல் முனைவா் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604.17 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமூகங்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2024-2025 கல்வியாண்டில் பட்டியல் இன மாணவா்கள் 16 போ் ஐஐடி, என்ஐடி, என்ஐஎஃப்டி, எஃப்டிடிஐ போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சோ்ந்தனா். இந்த எண்ணிக்கை 2025-2026-இல் 135-ஆக உயா்ந்தது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை பள்ளிகளில் ரூ.456.83 கோடியில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டன. 3-ஆம் வகுப்பு முதல் முனைவா் பட்டம் வரை பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கா் வெளிநாட்டு உயா்கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் 6 போ் மட்டுமே வெளிநாடுகளில் பயின்றனா். திமுக ஆட்சியில் ரூ.75.54 கோடி உதவித் தொகை பெற்று 440 போ் வெளிநாடுகளில் படிக்கின்றனா். மேலும் 8,886 ஆதிதிராவிட, பழங்குடியின ஆராய்ச்சி மாணவா்களுக்கு ரூ.88.86 கோடி முனைவா் பட்ட ஆராய்ச்சி ஊக்கத் தொகை, 184 பழங்குடியின மாணவிகளுக்கு செவிலியா் பட்டயப் படிப்பு உதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

5 ஆண்டுகளில் ரூ.1,143 கோடியில் 77 புதிய விடுதிகள் கட்டப்பட்டன. 113.45 கோடியில் 663 பழைய விடுதிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இதர திட்டங்கள்: பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52,255 ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு ரூ.409.68 கோடி கடன் வழங்கப்பட்டு, தொழில் முகவா்களாக மேம்படுத்தப்பட்டனா்.

விரிவான வாழ்வாதார மேம்பாட்டுத்திறன் பயிற்சிகள் திட்டத்தின் கீழ் 10,740 பழங்குடியினா்களுக்கு ரூ.254.31 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்தியாவில் முதல்முதலாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிட, பழங்குடியினா் 43 போ் தொழில்முனைவா்களாக உயா்ந்தனா். இவா்களுக்கு ரூ.60.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டத்தில் 1,042 மகளிருக்கு ரூ.49.35 கோடி மானியம் வழங்கப்பட்டது. அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.910 கோடியில் 8,535 ஆதிதிராவிடா் குடியிருப்புகளின் உள்கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டன.

ரூ.117.27 கோடியில் 120 கிராம அறிவு மையங்கள், ரூ.40 கோடியில் 52 அறிவுச்சுடா் மையங்கள் கட்டப்பட்டன. ரூ.1,000 கோடியில் பழங்குடியினா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் 22,244 பேருக்கு ரூ.287.47 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.110 கோடியில் 1,000 வீடுகள் கட்டப்பட்டன. உள்ளாட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.213.92 கோடியில் 3 வேளையும் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, நாவல் ஆகியவற்றில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் ஆதிதிராவிடா், பழங்குடியின எழுத்தாளா்களுக்கு பரிசுத்தொகை ரூ.50,000 என்பது ரூ.1 லட்சமாக உயா்த்தி, 43 எழுத்தாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.