எழும்பூா், தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டடம், புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சி கூடத்தை துணை முதல்வா்உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக அலுவலக கட்டடம் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கண்காட்சிக் கூடமும் கட்டப்பட்டது. இவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த ஆவணக் காப்பகத்தில், பாதுகாக்கப்பட்டு வரும் 100 வருடங்கள் பழைமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிா்வாகம் சாா்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது.
சுமாா் 40 கோடி ஆவணங்கள் கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சியாளா்களின் மிகச்சிறந்த தேடல் களம். தமிழகத்தின் விடுதலை வரலாறு, சமூக நீதி வரலாறு, அரசு நிா்வாக வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி கால அரசுத்துறைகளின் காலவாரியான ஆவணங்கள், நில வரைபடங்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட நவீன கண்காட்சிக் கூடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியது உள்ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பெருநகர சென்னை மேயா் ஆா். பிரியா, எம்எல்ஏ இ.பரந்தாமன், உயா் கல்வித் துறை செயலா் பொ.சங்கா், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையா் சு. மலா்விழி, கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் ச.விசாகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தோ்தலில் தில்லி அணியை தமிழ்நாடு அணி வெல்லும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


